உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் கும்பலிடம் 6 பேர் ரூ.1.92 லட்சம் இழப்பு

சைபர் கிரைம் கும்பலிடம் 6 பேர் ரூ.1.92 லட்சம் இழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.1.92 லட்சம் இழந்துள்ளனர். கொரவள்ளிமேட்டைச் சேர்ந்த நபர், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கேரளா லாட்டரியில் 8 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, லாட்டரி பரிசு பணத்தை பெற செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, 78 ஆயிரத்து 220 ரூபாய் மர்மநபருக்கு அனுப்பி ஏமாந்தார். உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 68 ஆயிரத்து 598, புதுச்சேரியை சேர்ந்தவர் 22 ஆயிரத்து 490, கதிர்காமத்தை சேர்ந்தவர் 6 ஆயிரத்து 500, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் 9 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்தவர் 7 ஆயிரத்து 549 என, 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 357 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !