உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ. 35.4 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

6 பேரிடம் ரூ. 35.4 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

புதுச்சேரி:புதுச்சேரியில், 6 பேரிடம் 35.4 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். நெல்லித்தோப்பை சேர்ந்தவர் சுதாகர். இவர் போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார். இவரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, 30 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்.முதலீடு செய்த, 15 லட்சத்திற்கு கிரிப்டோ கரன்சி வாங்கினார். அந்த கரன்சியை வெளியில் விற்பனை செய்யமுடியவில்லை. பின்னர் தான் பேசிய நபர் மோசடி கும்பல் என, தெரியவந்தது. தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த சுனிதா, இவரை தொடர்பு கொண்டவர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பிய அவர் 2.23 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.முத்தியால்பேட்டையை சேர்ந்த நரேந்திரன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 1.79 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். திருபுவனையை சேர்ந்த சக்திவேல் 27 ஆயிரம், காலாப்பட்டு செந்தமிழ், 29, ஆயிரம் ரூபாய், கதிர்காமம் நடராஜன், 46 ஆயிரம் என, மர்ம கும்பலிடம் பணத்தை ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ