சீட்டு விளையாடிய 7 பேர் கைது
காரைக்கால்: காரைக்காலில் சூதாட்ட விளையாடிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நகர போலீசாருக்கு வலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் ஏழு பேர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதிலக அதே பகுதியைச் சேர்ந்த வலத்தெரு பகுதியை சேர்ந்த திருமுருகன்.44; ,சக்திவேல், 42;, வெள்ளைசாமி,36; ராமன், 33; குரு பிரசாத், 33; ,விஜய் ,29; சௌந்தர்ராஜன், 49; ஆ கியோர் மீது வழக்குப் பதிந்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் 2500 ரூபாய், ஆறு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.