உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

கிள்ளை : வீடு புகுந்து 7 சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிள்ளை காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், 55; இவர், தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள சூட்கேசில் நகைகளை வைத்திருந்தார். கடந்த 25ம் தேதி சூட்கேசை திறந்து பார்த்தபோது, 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து, கலையரசன் அளித்த புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் நேற்று வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ