மேலும் செய்திகள்
போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி
11-Sep-2026
புதுச்சேரி: மூலக்குளத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் சிக்கி மயங்கி கிடந்த 73 வயது மூதாட்டியை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புதுச்சேரி, மூலக்குளம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பட்டம்மாள், 73. இவர் வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வருகிறார். இவர் தினமும் காலையில் வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்து மற்றவர்களிடம் பேசிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் கீழே வராததால், கீழ்த்தளத்தில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து முதல் மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டியின் வீட்டின் கதவு திறக்க முடியாத வகையில் பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்து ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார், கோரிமேடு தீயணைப்புத் துறையினடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி பட்டம்மாள், தலையில் காயத்துடன் மயக்கி கிடந்தனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து மூதாட்டியை மீட்டு, மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
11-Sep-2026