மேலும் செய்திகள்
புதுச்சேரியில் விடியற்காலையில் கனமழை
19-Nov-2025
புதுச்சேரி: பாகூரில் நேற்று முன்தினம் 8.7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி முழுதும் பரவலாக மழை பெய்தது. அதில், நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை அதிகப்பட்சமாக பாகூரில் 8.7 செ.மீ., மழை பதிவாகியது. புதுச்சேரியில் 1.8 செ.மீ., அளவிற்கும், திருக்கனுார் மற்றும் பத்துக்கண்ணில் தலா ஒரு செ.மீ., அளவிற்கு மழை பதிவாகியது. நேற்றும் காலை முதல் இரவு வரை அவ்வப்போது மழை பெய்தது.
19-Nov-2025