உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட 894 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட 894 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

2 கடைகளுக்கு அபராதம் விதிப்புபுதுச்சேரி: புதுச்சேரியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 894 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் கேரிபேக், ஸ்டிரா உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. சில கடைகளில் தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி இளங்கோ, தாசில்தார் பிரித்வி, புதுச்சேரி நகராட்சி டாக்டர் பிரித்தா, உதவி பொறியாளர் கிருஷ்ணா, வருவாய் அதிகாரி சிவக்குமார், தொழிலாளர் துறை அதிகாரி ராஜவேலு தலைமையிலான குழுவினர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள 2 பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்.ஜித்து, பத்மா என்ற பிளாஸ்டிக் கடைகளில் பாலித்தீன் பைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு கடைகளிலும் இருந்து 894 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜித்து கடைக்கு ரூ. 20 ஆயிரம், பத்மா கடைக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு ஆதரவாக, பறிமுதல் நடவடிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு நிலவியது.சம்பவ இடத்திற்கு வந்த வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றம் நிர்வாகிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலர் வெளி மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை செய்வோருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகள் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை