மேலும் செய்திகள்
8 பேரிடம் ரூ.5.10 லட்சம் மோசடி
20-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.1.98 லட்சம் ஏமாந்துள்ளனர். அரியாங்குப்பத்தை சேர்ந்த நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 47 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 30 ஆயிரம் 240, வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் 28 ஆயிரம் 600, கீழ் அகரத்தை சேர்ந்தவர் 19 ஆயிரத்து 100, புதுச்சேரியை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 999, டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் 9 ஆயிரத்து 500, குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் 30 ஆயிரம், ரெயின்போ நகரை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 560, குயவர்பாளையத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரம் என, 9 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 999 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Aug-2025