| ADDED : பிப் 04, 2024 04:54 AM
திருபுவனை, : திருபுவனை பெரியபேட்டை சேர்ந்த தொழிலபதிபர் வேலழகன் கடந்த 2017ம் ஆண்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், கைதாகி ஜாமினில் வௌியே வந்த திருபுவனை வெர்ல்பூல் நிறுவன தொழிற்சங்கத் தலைவர் உதயகுமார்,47; கடந்த 2018ம் ஆண்டு ஏப்.22ம் தேதி வெர்ல்பூல் தொழிற்சாலைக்கு சென்றார்.அப்போது, 15 பேர் கொண்ட கும்பல் தொழிற்சாலை நுழைவு வாயிலில் நிறுத்தியிருந்த உதயகுமாரின் கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உடைத்தனர். லாரிக்கு தீ வைத்தனர். மேலும், சன்னியாசிக்குப்பத்தில் உள்ள உதயகுமாருக்கு சொந்தமான வீடு, மற்றும் மாட்டு பண்ணைகளை தாக்கி சேதப்படுத்தினர். அதில், 20 மாடுகள் கொல்லப்பட்டன.இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் நடவடிக்கை கோரி, உதயக்குமார் புதுச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட் 4ல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜகுமரேசன், உதயக்குமாரின் புகாரை பதிவு செய்து விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் உதயக்குமார் சொத்துக்களை சேதப்படுத்திய சுதாகர் உள்ளிட்ட 12 பேர் மீது திருபுவனை போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.