மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை: 5 பேர் கைது
28-Sep-2026
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசிய படி, ரகளையில் ஈடுபட்ட கடலுார் ராமபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் 45; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி 42; என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட குண்டு உப்பளவாடியை சேர்ந்த பாண்டியன் 38; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
28-Sep-2026