உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

பொது இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு பதிவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி., நகர் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 41; என்பவரை கைது செய்தனர். கரையாம்புத்துார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மணமேடு ஏரிக்கரை பகுதியில் ரகளையில் ஈடுபட்ட பேரிச்சம்பாக்கத்தை சேர்ந்த திருக்குமரன், 30, என்பவரை கைது செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, முள்ளோடை சாலையில் ரகளையில் ஈடுபட்ட அங்குச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த ஹேமநாதன் 38; மற்றும் கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட  பண்ருட்டியை சேர்ந்த மதன் 46;  என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ