மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு
15-Nov-2026
புதுச்சேரி: டி நகர் போலீசார் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளை செய்த திலாஸ்பேட்டை நிர்மல்குமார்,33; லாஸ்பேட்டை ராஜ்குமார்,36; கலியபெருமாள்,46; பாக்கமுடையான்பட்டு தனியார் பார் அருகில் ரகளை செய்த லாஸ்பேட்டை பவித்ரன்,21; ரெட்டியார்பாளையம் கணேஷ்,32; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உருளையன்பேட்டை போலீசார் நேற்று (நவ.,28) மறைமலையடிகள் சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில் ரகளை செய்த திண்டிவனம் பாண்டியன் என்பவர் மீதும் அய்யனார் கோவில் தெருவில் ரகளையில் ஈடுபட்ட தமிழக பகுதியை சேர்ந்த ரூபன்,30; என்பவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர். திருபுவனை போலீசார் நேற்று மதகடிப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் பார் அருகில், குடிபோதையில் ரகளை செய்த விழுப்புரம் சரவணன்,27; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Nov-2026