உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த பிட் இந்தியா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; உடல் ஆரோக்கியமாக இருக்க வாரத்தில் ஒரு நாளாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். உடல் தகுதியுடன் இருந்தால் எதையும் செய்ய முடியும். ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கபடுகிறது. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது அழகு. அதை அப்படியே வாழ்வில் கடைபிடித்தால் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்' என்றார். அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'பிட்' இந்தியா இயக்கம், உடல் ஆரோக்கியத்துக்காக துவங்கப்பட்டது. ஞாயிறு தோறும் சைக்கிள் ஓட்டுவதை வலியுறுத்தி பேரணி நடந்தது. கிராமங்களில் திடல்கள், உள்விளையாட்டு அரங்கை மேம்படுத்த மத்திய அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. 30 தொகுதிகளிலும் விளையாட்டுக்களை மேம்படுத்த தலா ரூ. 10 கோடி வீதம் ரூ.300 கோடி பெற மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி இருக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை