மேலும் செய்திகள்
பாட்டிலால் குத்திய நபருக்கு வலை
20-Jul-2025
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே ஆற்றில் மீன் பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் மதியழகன், 57. இவர் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தினமும் மீன், நண்டு பிடித்து வந்தார். கடந்த 11ம் தேதி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போனார். அவரது மகன் மனீஷ் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், அவர் ஆற்றில் சடலமாக மிதந்தார். போலீசார் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20-Jul-2025