மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி சிறுமி பலி
14-Dec-2024
புதுச்சேரி : பாகூர், குருவிநத்தம் பாரதி நகரை சேர்ந்தவர் அன்புராஜ், 40; பெயிண்டர்.இவர், புதுச்சேரி ஜீவானந்தம்புரம், பிரியதர்ஷினி நகரில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அக் ஷரா, 10; தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.அக் ஷரா கடந்த 22ம் தேதி மதியம் வீட்டின் சுவரில் அடிக்கப்பட்டிருந்த 'L' வடிவ ஆணியில், தனது தாயின் துப்பட்டாவை மாட்டி ஊஞ்சல் ஆடினார்.அப்போது, எதிர்பாராத விதமாக துப்பட்டா அக் ஷராவின் கழுத்தை இறுக்கியதால், மயக்கமடைந்தார்.அவரை, உறவினர்கள் மீட்டு ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, அக் ஷரா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அன்புராஜ் அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Dec-2024