உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டிற்கு ஒரு மரக்கன்று: துணை சபாநாயகர் வழங்கல்

வீட்டிற்கு ஒரு மரக்கன்று: துணை சபாநாயகர் வழங்கல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் வீட்டிற்கு ஒரு மரக்கன்று துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், வீட்டிற்கு ஒரு மரம் என, பசுமை புதுச்சேரி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக நெட்டப்பாக்கம் தொகுதியில் இத்திட்டத்தின் கீழ் வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நெட்டப்பாக்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி, மரக்கன்றுகளை வழங்கினார். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலையில், மா, பாலா, எலுமிச்சை, மாதுளை, சீதா மற்றும் கொய்யா உள்ளிட்ட ஆயிரம் பழ மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தேவானந்தன், திட்ட அலுவலர் பன்னீர் செல்வம், சாந்தலட்சுமி, விமல்ராஜ், தினேஷ் மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ