உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடியிருப்பு பகுதியில் ஓவர் ஸ்பீடில் பறக்கும் டெலிவரி பைக்குகளால் தொடர் விபத்து

குடியிருப்பு பகுதியில் ஓவர் ஸ்பீடில் பறக்கும் டெலிவரி பைக்குகளால் தொடர் விபத்து

புதுச்சேரி: கென்னடி கார்டன் குடியிருப்பு பகுதியில் பொருட்களை டெலிவரி செய்ய அதிவேகமாக செல்லும் பைக்குகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வீட்டிற்கு டெலிவரி செய்யும் சுகி, சுமோட்டா போன்று, வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை டெலிவரி செய்ய தனி மொபைல் ஆப் உருவாக்கியுள்ளனர்.இதில், ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் பொருட்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து டெலிவரி செய்யப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். நகரப் பகுதி டிராபிக்கில் சிக்கி தவிப்பதற்கு பதில், இந்த மொபைல் ஆப் மூலம், காய்கறி, மளிகை பொருள், பால் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்கின்றனர்.இந்நிறுவனத்தின் பொருட்கள் வைக்கும் குடோன், வேர் ஹவுஸ், கருவடிக்குப்பம் கென்னடி கார்டன் குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் நகர பகுதியில் பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்பதால், கென்னடி கார்டன் வேர் ஹவுஸில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு டெலிவரி நபர்கள் பைக்கில் அதிவேகத்தில் பறக்கின்றனர்.நாள் முழுதும் கென்னடி கார்டன் பகுதியில் பைக்குகள் பிசியாக பறக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வங்கி அதிகாரி ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, டெலிவரி பாய் பைக் மோதி முதுகு தண்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் 2ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுவன் மீது டெலிவரி பைக் மோதி விபத்து ஏற்பட்டது.பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அதிவேகமாக செல்லும் இந்த பைக்குகளால் தொடர்ச்சியாக விபத்து நிகழ்ந்து வருகிறது. குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள வேர் ஹவுசை, இ.சி.ஆர்., அல்லது நெடுஞ்சாலையோரம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை