உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓடும் பஸ்சில் மாணவர் சாவு பண்ருட்டி அருகே பரிதாபம்

ஓடும் பஸ்சில் மாணவர் சாவு பண்ருட்டி அருகே பரிதாபம்

பண்ருட்டி : கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் அரவிந்த்,19; விழுப்புரம் தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., கம்ப்யூட்டர் முதலாமாண்டு படித்து வந்தார்.இவர், நேற்று கல்லுாரிக்கு சென்றுவிட்டு மாலை 5:00 மணியளவில் கல்லுாரி பஸ்சில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.பண்ருட்டி அடுத்த ராசாப்பாளையம் அருகே பஸ் வந்தபோது அரவிந்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் அவரை, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ