தாலுகா அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீ வைத்துக்கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் மோகன்ராஜ், 33; இவர், நேற்று மதியம் 1:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.