அட்டியா பட்டியா போட்டியில் சாதனை; மாணவிக்கு பாராட்டு
வில்லியனுார்; அட்டியா பட்டியா விளையாட்டில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ஜவகர் நிகேதன் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.வில்லியனுார் ஜவகர் வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி சவுமியா. தேசிய அளவிலான அட்டியா பட்டியா போட்டி தமிழகத்தில் நடந்தது. ஈரோட்டில் நடைபெற்ற இப்போட்டியில் புதுச்சேரி அணி மணிப்பூர், கோவா, இமாச்சல் பிரதேஷ் ஆகிய அணிகளை வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியுடன், புதுச்சேரி அணி மோதியது. அதிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கேரளா அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது. தேசிய அளவில் முதலிடம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அதுபோல் புதுச்சேரி மாணவர்கள் அணியும் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.பயிற்சியாளர் சிவகுமார், பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி சவுமியாவையும் பள்ளி தாளாளர் ராமசிவராஜன் பாராட்டினார்.