உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் சாதனை

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் சாதனை

புதுச்சேரி : மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் ஐசிடி அகாடமி நடத்திய 'யூத்டாக்' போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். 'யூத்டாக் 2024'போட்டியில் 7,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் முதல் சுற்றில் பங்கேற்றனர். அதில், மாநில அளவிலான முன் இறுதிப் போட்டிக்கு 113 பேர் தகுதி பெற்றனர்.இதையடுத்து, முதல் கட்டமாக 12 நடுவர்கள் அடங்கிய குழு மாணவர்களின் பேச்சுத்திறனை மதிப்பிட்டு, 20 பேரை தேர்வு செய்தது. 2வது கட்டமாக 20 மாணவர்களில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான இறுதிச் சுற்று, 5 தொழில்துறை சார்ந்த நடுவர்கள், பேராசிரியர்கள் முன் நடந்தது. அதில், முதல் இரண்டு இடத்தை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் பிடித்தனர். முதல் இடத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு மாணவி ரம்யா, இரண்டாம் இடத்தை எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை மாணவி கவிதாஞ்சலி பிடித்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார். மாணவிகளை, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், உறுப்பினர் வேலாயுதம், கல்லுாரி முதல்வர் வெங்கடாசலபதி உட்பட பலர் பாராட்டினர்.மாணவி ரம்யா, வரும் 23ம் தேதி கோயம்புத்துார் மாவட்ட சிறுதொழில் சங்க வளாகத்தில் நடக்கும் இறுதி போட்டி யூத் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை