தண்ணீர் தேங்கினால் நடவடிக்கை: பஞ்சாயத்து ஆணையர் எச்சரிக்கை
பாகூர்: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட காலி மனைகளில் தண்ணீர்தேங்கி இருந்தால்நடவடிக்கை எடுக்கப்படும் என, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்டபல்வேறு இடங்களில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு, அந்த இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் காலியாக உள்ளன. அவற்றில் மழை தண்ணீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்கி நின்று கொசு மற்றும் ஈக்கள் மொய்த்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே, காலி வீட்டு மனை வைத்திருப்போர் தங்களின் வீட்டு மனைகளில் மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல்,மனைகளில் மண் கொட்டி சமன்படுத்தி கொள்ள வேண்டும்.தவிர தனியார் மனைப்பிரிவு உரிமையாளர்கள் தங்கள் வசம் உள்ள தாழ்வான காலி மனைப்பிரிவுகளில், மழை நீர் தேங்காமல் சரிசெய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.தவறினால் கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.