உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் விவகாரம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு

ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் விவகாரம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு

பாகூர்: தாய்வழி பூர்வீக ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, ஆதரவு - எதிர்ப்பு என இரு தரப்பினர் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாகூரில் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மாநில பூர்வீக அட்டவணை இனமக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தாய் வழி பூர்வீக ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராமலிங்கம், பொறுப்பாளர்கள் பரமசிவம், கஜேந்திரன், புண்ணியகொடி, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, புதுச்சேரி அரசின் உத்தரவு இல்லாமல், தன்னிச்சையாக ஜாதி சான்றிதழ் வழங்கி வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.இதனிடையே, அங்கிருந்து 50 மீட்டர் துாரத்தில், மணிக்கூண்டு அருகே, தாய் வழி பூர்வீக ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, புதுச்சேரி பூர்வீக பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கோர்ட் உத்தரவுபடி, தங்களுக்கு தாய் வழி பூர்வீக ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தினர்.பாகூரில், தாய்வழி பூர்வீக ஆதிதிராவிடர் ஜாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, ஆதரவும், எதிர்ப்பும் என, இரு தரப்பினர் ஒரே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை