உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 நிர்வாகிகள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி- கிளோயிங் ஸ்டார்ஸ் அமைப்பின் சாசன வழங்கல் மற்றும் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் லியோன் கலந்து கொண்டு கிளப்பின் சாசனத்தை வழங்கினார். மாவட்ட அளுநர்கள் வைத்தியநாதன், ஜெயகுமார், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளராக மூத்த ரோட்டரி தலைவர்கள் மணி, ஜோசப் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி கிளோயிங் ஸ்டார்ஸ் அமைப்பின் நிறுவனர், சாசனத் தலைவராக ராம்குமார் நியமிக்கப்பட்டார். செயலாளராக, பூர்ணிமா, பொருளாளராக சங்கரானந்த் பாலராஜூ ஆகியோர் பதவியேற்றனர். கிளப் ஆலோசகராக ராமச்சந்திரமூர்த்தி, 81 உறுப்பினர்கள் நியமிக்கபப்ட்டுள்ளனர். இந்த அமைப்பு மூலம்சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேவைத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !