உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதி பெற்று விளம்பரம் செய்யும் உத்தரவை கவர்னர் ரத்து செய்ய வேண்டும்

அனுமதி பெற்று விளம்பரம் செய்யும் உத்தரவை கவர்னர் ரத்து செய்ய வேண்டும்

புதுச்சேரி : புதுச்சேரியில் பொது இடங்களில், அனுமதி பெற்று விளம்பரம் செய்து கொள்ளலாம் என்ற அரசின் முடிவை, கவர்னர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் நகராட்சிக்கு சம்பந்தம் இல்லாத இடங்களிலும் திறந்த வெளி விளம்பரங்கள் வழங்கும் அனுமதியை நகராட்சி ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை ஐகோர்ட்டை அவமதிக்கும் செயலாக உள்ளது. திறந்த வெளி விளம்பரங்கள் தடை சட்டம் அமலில் உள்ள போது அந்த சட்டத்தை மீறி பணத்திற்காக அனுமதி வழங்கும் அதிகாரத்தை நகராட்சி ஆணையருக்கு யார் வழங்கியது? ஒரு விஷயத்தில் சட்டம் ஒன்று அமலில் இருக்கும் போதே அந்த சட்டத்தை மீறும் முடிவு குறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதா?தனித்தனியாக விளம்பரம் செய்ய அனுமதியளித்தால் கட்டணங்கள் வசூல் செய்வதில் சிரமம் உள்ளது. அதனால் புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் விளம்பரங்கள் செய்ய அனுமதியும் அதற்கான கட்டணத்தையும் வசூல் செய்து கொள்ளலாம் என ஆறே மாதத்தில் எதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரசு நிச்சயம் ஒப்படைக்கும். இது சம்மந்தமாக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில், அனுமதி பெற்று விளம்பரம் செய்து கொள்ளலாம் என்ற அரசின் முடிவை கவர்னர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை