உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை

பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியா ளர் அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.அமைச்சர் லட்சுமிநாரா யணன் தலைமை தாங்கினார். தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், அமைச்சரின் சிறப்பு பணி அதிகாரி வாசுதேவன் மற்றும் அனைத்து கோட்ட செயற் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசுகையில், 'நேற்று முன்தினம் பெய்த மழையின் போது, பெரிய வாய்க்காலுக்கு இருபுறமும் சாலையில் மழை நீர் தேங்கியது. அவ்வாறு இனி தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.புஸ்ஸி வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, பாவாணர் நகர், ரெயின்போ நகர், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக மோட்டார் பம்புகள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளில் மழை காலங்களில் நிலைமையை சமாளிப்பதற்கு, இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் அடங்கிய பகுதிகளை ஒரு செயற்பொறியாளர் தலைமையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் ஊழியர்கள் குழுவை அமைத்து, போர்க்கால அடிப்படையில் அந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகளை உடனடியாக செய்ய திட்டமிட்டு, அதிகாரிகள் பெயர்கள், மொபைல் எண்களுடன் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !