உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கதர் கிராம தொழில்களை மேம்படுத்த ஆலோசனை

கதர் கிராம தொழில்களை மேம்படுத்த ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கைவினை மற்றும் கதர் கிராம தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சமீபத்தில், கவர்னர் கைாலாஷ்நாதன், டில்லி சென்று கதர் கிராம தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமத் சந்தித்து கதர் கிராம தொழில்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில், தொழில் வளர்ச்சித் துறை செயலர் ருத்ரகவுடு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கோவிந்தராஜன், செயல் மேலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், டில்லி தேசிய கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் காணொளி மூலம் பங்கேற்றார். கூட்டத்தில், கைவினை மற்றும் கிரமத் தொழில்களை மேம்படுத்த புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பயிற்சி மையம் உலக தரத்தில் விற்பனை அரங்கம் அமைப்பது, கைவினைக் கலைஞர்கள் மற்றும் கிராமத் தொழில்களில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் பயிற்சி அளிப்பது.புதுச்சேரியில் கைவினையில் பத்ம ஸ்ரீ மற்றும் தேசிய விருது பெற்றவர்கள் மற்றும் சிறந்த கைவினைப் பொருள்களை உலக அளவில் புகழ்பெறச் செய்வது. நாடு முழுவதும் உள்ள 8000 கிராம தொழில் விற்பனை மையங்களிலும் புதுச்சேரி கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்வது. உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தை மேம்படுத்துவது, அதற்கான பூர்வாங்க ஆய்வுப் பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ