உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதகடிப்பட்டில் வேளாண் விழிப்புணர்வு முகாம்

மதகடிப்பட்டில் வேளாண் விழிப்புணர்வு முகாம்

திருபுவனை: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் தேசிய வேளாண்மை இயக்கம் சார்பில் அங்கக வேளாண்மை குறித்த விழப்புணர்வு முகாம் மதகடிப்பட்டில் நடந்தது. துணை வேளாண் இயக்குனர் சாந்தி பால்ராஜ் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பு துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் பாரம்பரிய ரகங்களை பயிர் செய்வது குறித்தும் பேசினார். ஏற்பாடுகளை ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஸ்வரி, அலுவலக பணியாளர்கள் ஜெயசங்கர், சண்முகம், சுபாஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை