உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாண் வளர்ச்சி பிரசார கூட்டம்

வேளாண் வளர்ச்சி பிரசார கூட்டம்

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க கூட்டம் கீழ்சாத்தமங்கலத்தில் நடந்தது.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்,புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க கூட்டம் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடத்தின.வில்லியனுார் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவசண்முகம் தலைமை தாங்கி, வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்கத்தை துவக்கி வைத்து, பேசினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக முனைவர் ஜெயந்தி தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா உயிர் உரங்கள் பயன்பாடு குறித்து விளக்கினார். மண் பரிசோதனைக் கூடத்தை சேர்ந்த வேளாண் அலுவலர் சுபா ஆனந்தி, மண்வள அட்டையின் பயன்பாடு குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியூர் உழவர் உதவியகத்துக்கு உட்பட்ட களப்பணியாளர்கள் முருகன், சிவசண்முகம் ஆகியோர் செய்தனர்.ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ