உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விவசாய இடுபொருட்கள் செயல் விளக்கம்

 விவசாய இடுபொருட்கள் செயல் விளக்கம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில், செயல்விளக்கம் நடந்தது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தொண்டமாநத்தம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஆகியன சார்பில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பல்வேறு இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொண்டமாநத்தம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் மற்றும் வில்லியனுார் வேளாண் இணை இயக்குனர் அலுவலக ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இயற்கை விவசாய இடுபொருள் தயாரிப்பு குறித்த செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பிள்ளையார்குப்பம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ