உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு இடங்கள் பெறுவதில் ஏமாற்றம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு இடங்கள் பெறுவதில் ஏமாற்றம் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி : தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறுவதில் கல்லுாரி உரிமையாளர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.அவர், கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் தேசிய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுபடி, குறைந்தபட்சம் 50 சதவீத இடங்களை பெற எந்த முயற்சி எடுக்காமல், ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாயத்து பேசி அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அரசு எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 325 இடங்கள் குறைந்தபட்சம் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 242 இடங்கள் மட்டுமே அரசின் இட ஒதுக்கீடாகவும், நீதிமன்ற உத்தவுபடி கூடுதலாக ஒரு தனியார் கல்லுாரியில் இருந்து 13 இடங்கள் சேர்த்து 255 இடங்கள் இந்த ஆண்டு பெறப்பட்டது.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக இடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.16 லட்சம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 22 லட்சம் வரைக்கும் கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது.கவர்னரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். தனியார் மருத்துவ கல்லுாரியில் 50 சதவீத இடங்களை பெற கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 50 சதவீத இடங்களை பெற சட்டசபை கூட்டத்தில் சிறப்பு சட்டத்தை இயற்றவேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை