உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., பிரமுகருக்கு பீர் பாட்டில் குத்து

அ.தி.மு.க., பிரமுகருக்கு பீர் பாட்டில் குத்து

புதுச்சேரி; அ.தி.மு.க., மாணவர் அணி தலைவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.முதலியார்பேட்டை, போன்கெரே வீதியைச் சேர்ந்தவர் பார்த்திபன்; அ.தி.மு.க., மாநில மாணவர் அணி தலைவர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நேற்று இரவு புதுச்சேரி அனிதா நகரைச் சேர்ந்த ஹரிப் முகமது 34, என்பவர், போன் மூலம் ரூ. 50 ஆயிரம் மாமூல் கேட்டுள்ளார். அதற்கு பார்த்திபன் மறுக்கவே இருவருக்கும் போனில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஹரிப்முகமது, பார்த்திபனை நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். அதற்கு அனிதா நகரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருப்பதாக பார்த்திபன் தெரிவித்தார். அங்கு சென்ற ஹரிப் முகமது அவர் வைத்திருந்த பீர்பாட்டிலால் பார்த்திபனை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படு காயமடைந்த பார்த்திபன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி