உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் பேனர்கள் அகற்றம் அ.தி.மு.க.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

அரியாங்குப்பத்தில் பேனர்கள் அகற்றம் அ.தி.மு.க.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். புதுச்சேரியில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள், கட் அவுட்கள் வைக்க கோர்ட்தடை விதித்துள்ளது. இருப்பினும், தடையை மீறி தொடர்ந்து, பொது இடங்களில், போக்குவரத்திற்கு இடையூராக பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில், அரியாங்குப்பம் பகுதியில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை, ஆணையர் ரமேஷ் அப்புறப்படுத்திடஉத்தரவிட்டார். இதையடுத்து,கொம்யூன் பஞ்சாயத்து வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், தன்ராஜ், மதன், செழியன் . உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன்நேற்று காலை அரியாங்குப்பத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்தஅ.தி.மு.க., வினர், பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடும் போது பேனர்கள் வைக்கப்பட்டது. அப்போது,பேனர் தடை சட்டத்தை அமுல்படுத்தாமல், நாங்கள் அனுமதி பெற்றுவைத்துள்ள பேனர்களை கிழித்து அப்புறப்படுத்துவது சரியல்ல என்றனர். அதிகாரிகள் அந்த அனுமதி ஆவணத்தை வாங்கி ஆய்வு செய்த போது, அந்த பேனர் வைக்க வேண்டிய இடம் தேய்காய்திட்டு சந்திப்பு பகுதி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் குழுவினர், எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம், அனுமதி ஆவணத்தை சரியாக படித்து விட்டு வந்து பேசுங்கள் எனகூறி விட்டு, தொடர்ந்து பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பேனர்கள் அகற்றும் பணியால், அரியாங்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி