உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் ஸ்டாண்டை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டாண்டை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்டை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.கடலுார் சாலை, தற்காலிக பஸ் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில், மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரியில் 33 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு புதியதாக கட்டப்பட்ட 30க்கும் மேற்பட்ட கடைகளை பிரித்து கொடுப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையம் விரிவாக்கம் முடிவடைந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகும், இதுவரையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்காலிக பஸ் ஸ்டாண்டால் மக்கள் பல்வேறு துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால், முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி பஸ் ஸ்டாண்டை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி