அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் பிறந்தநாள் விழா
புதுச்சேரி: அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது.விழாவிற்கு தொகுதி செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலையில், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடினார்.பிறந்தநாள் விழாவையொட்டி, 20 பேருக்கு சைக்கிள், 5 பேருக்கு தட்டு வண்டிகள், 2 ஆயிரம் பெண்களுக்கு புடவைகள், 500 பேருக்கு வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தொண்டர்களுடன் 200 பைக்கில் ஊர்வலமாக வீராம்பட்டினம் செங்கழு நீர் அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சாமி தரிசனம் செய்தார். விழாவில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரியாணி உணவு விருந்து அளிக்கப்பட்டது.அவைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.