உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

புதுச்சேரி: அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்., காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை, மாநில செயலாளர் அன்பழகன் அறிமுகப்படுத்தினார்.  இ.சி.ஆரில் உள்ள தனியார் ரெசிடென்சியில் நடந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க, மாநில செயலாளர் அன்பகழன் தலைமை தாங்கி பேசுகையில், ‘தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.,காங்., சார்பில், அசோக் ஆனந்த்  போட்டியிடுகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.  நமது கூட்டணி கட்சி சார்பில், போட்டியிடும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது, நமது கடமை.  கடந்த சட்டசபை தேர்தலில், காங்., தி.மு.க, கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்., தலைவர் டிபாசிட் வாங்கவில்லை. தற்போது இரு கட்சிகளும் தனித் தனியாக பிரிந்து நிற்கின்றனர். இரு கட்சிகளும் டிபாசிட் வாங்குவதற்காக வாடகை வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் 2ம் இடத்திற்காக போட்டியிடுகின்றனர். என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை வெற்றி பெற செய்யவதற்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை