| ADDED : டிச 05, 2025 07:05 AM
புதுச்சேரி: கட்டட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மழை நிவாரண நிதியா க ரூ. 10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் அந்தோணி கோரிக்கை வைத்துள்ளார். அவரது அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேல் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே, கட்டடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.