துாய்மை பணியாளர்களுக்கு போனஸ் ஏ.ஐ.யூ.டி.யூ.சி., வலியுறுத்தல்
புதுச்சேரி: துாய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஏ.ஐ.யூ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்க தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி நகரை சுத்தம் செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு போனஸ், அட்வான்ஸ் உள்ளிட்ட எந்த வித உரிமைகளையும், சலுகைகளையும் அளிக்க வில்லை. இதனை வன்மை யாக கண்டிக்கின்றோம். என்.ஆர்.காங்., –பா.ஜ., அரசு தொழிலாளர் களுக்கு விரோதமான அரசு என்பதற்கு இதுவே சான்றாகும். துாய்மை பணியாளர்கள் வேலை செய்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும். இல்லையென்றால், நகரமே நாற்றம் எடுத்து விடும். எனவே துாய்மை பணியாளர்கள் அனை வருக்கும் தீபாவளி போனஸ் அட்வான்ஸ் உள்ளிட்டவற்றை உடனடியாக புதுச்சேரி அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.