உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு

கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு

புதுச்சேரி : கலை அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:கலை அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான ஆன்லைன் வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனைகள் தீர்வு காணப்பட்டு, தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சீட் ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், அனைத்து அசல் சான்றிதழ்கள், கட்டணம் மற்றும் சீட் ஒதுக்கீட்டு உத்தரவை நாளை மறுநாள் 18ம் தேதி மாலை 5:00 மணிக்குள், கல்லுாரி முதல்வரிடம் சமர்ப்பித்து, கல்லுாரியில் சேர வேண்டும். மேலும், விபரங்களுக்கு, சென்டாக் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை