மேலும் செய்திகள்
தி யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா கோலாகலம்
14-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.ஆல்பா கல்வி நிறுவனங்களின் சேர்மன் பாஷிங்கம் வரவேற்றார். விழாவை, ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் தனலட்சுமி பாஷிங்கம், ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை இயக்குநர் ராஜலட்சுமி, டாக்டர் நந்தினி நவீன்தியாகு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.முதல்வரின் தனி செயலர் அமுதன் தலைமை தாங்கினார். பிரம்ம குமாரிஸ் ராஜயோக மெடிடேஷன் சென்டர் ஒருங்கிணைப்பாளர் கவிதா சிறப்புரையாற்றினார். ஆல்பா பள்ளி முன்னாள் மாணவர் டாக்டர் ராஜ், ஆல்பா ஆர்த்தோ கிளினிக் இயக்குநர் டாக்டர் நவீன்தியாகு ஆகியோர் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், நீட் தேர்வில் முதலிடம் பெற்று, பல்வேறு மருத்துவ பிரிவில் இடம் பெற்ற மாணவர்களுக்கும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்,பரிசுகளை வழங்கி பேசினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு நன்றி கூறினார்.
14-Apr-2025