அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புதுச்சேரி: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2010ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் பச்சையப்பன் வரவேற்றார். பள்ளியின் ஆசிரியர் பாலகுமார் நோக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில், 2010ம் ஆண்டு பயிற்று வித்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அப்போது, பணியாற்றிய ஆசிரியர்கள் வரதராஜன், அரிகிருஷ்ணன், மகாலிங்கம், ஆறுமுகம், அந்தோணிசாமி, திருகாமேஸ்வரன், சரவணன், செந்தில்குமாரி, மோகன்தாஸ், உமா மகேஸ்வரி, அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், சாந்தி, நிர்மலா, ஜாய்ஸ் லிண்டா, பச்சையம்மாள், சிவகாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் அய்யப்பன், சவுந்தர்யா ஆகியோர் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து தற்போது பயிலும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நன்னெறிகள் குறித்து பேசினர். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆசிரியர்கள் ரேணு, செந்தமிழ் செல்வி, சபரிநாதன், ப்ளோரன்ஸியா, ஸ்ரீமதி, மகேஸ்வரி, சுஜாதா, ஆஷா, அகல்யா, சுமதி ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவி அனிதா நன்றி கூறினார்.