உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெட்டப்பாக்கம்: மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த1992--97ம் ஆண்டு படித்து வெளியேறிய மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சரவணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பள்ளி முதன்மைக்கல்வி அதிகாரி குலசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் காளிதாஸ், ஜெயபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ராமசாமி, பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், மொழியாசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தற்போதைய ஆசிரியர்கள் இளங்கோ, குமரசேன், ரேவதி , ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அரிவரதன் கருத்துரைவழங்கினார். முன்னாள் மாணவர் கலியபெருமாள் நோக்கவுரையாற்றினார். விழாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு மின் விசிரிகள், மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டு நினைவுபரிசு வழங்கப்பட்டது. பின் மரக்கன்றுகள் நடப்பட்டது.முன்னாள் மாணவர் வெங்கட கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை