உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் பாதாள உலக நாயகி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.தவளக்குப்பம், அடுத்த பூரணாங்குப்பத்தில் பாதாள உலக நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று நான்காம் கால பூஜை, காலை 8:15 மணியளவில், கோவில் விமானத்தில் புனிநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இவ்விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை