உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறை படும் பச்சைக்கிளிகளுக்கு விடுதலை அளித்து வரும் ஆர்வலர்

சிறை படும் பச்சைக்கிளிகளுக்கு விடுதலை அளித்து வரும் ஆர்வலர்

பேசும் பறவையாம் பச்சைக்கிளி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வேகமாக அழிந்து வருகிறது. இதனால், தமிழக மற்றும் புதுச்சேரியில், வீடுகளில் செல்ல பிராணிகளாக பச்சை கிளியை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், தமிழக பகுதிகளான செஞ்சி, மலையனூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பச்சைக் கிளிகளை பிடித்து வந்து, புதுச்சேரியில் வனத்துறையினருக்கு தெரியாமல் ஜோடி ரூ.400 ரூபாய்க்கு சிலர் விற்று வருகின்றனர்.இவர்களிடமிருந்து புதுச்சேரி குயவர்பாளையத்தை சேர்ந்த பறவை ஆர்வலர் அருண் பச்சைக்கிளிகளை பணம் கொடுத்து வாங்கி கிளிகளின் காயத்தை சரி செய்து மீண்டும் சுதந்திரமாக பறக்கவிட்டு வருகிறார்.தற்போது அறுபது கிளிகளை மீட்டுள்ள அருண், அவற்றை புதுச்சேரி பாரதி பூங்காவில் பறக்க விட தயார்படுத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ