உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுக்கடையில் மயங்கி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு

மதுக்கடையில் மயங்கி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு

திருபுவனை: திருபுவனை அருகே மதுக்கடையில் மயங்கி விழுந்து, தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.பதுச்சேரி திருபுவனை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 34; அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.மதுப்பழக்கம் உடைய ராஜேஷ், நேற்று முன்தினம் மாலை திருவாண்டார்கோவிலில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.மதுக்கடை ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருபுவனை போலீசார் விரைந்து வந்து, மயங்கிய நிலையில் இருந்த ராஜேைஷ மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தினர்.இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை