/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேபாளத்தில் சிக்கியவர்கள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்: அன்பழகன்
நேபாளத்தில் சிக்கியவர்கள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்: அன்பழகன்
புதுச்சேரி: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் அன்பழகன் பேசுகையில் ‘நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், புதுச்சேரியை சேர்ந்த மூன்று பெண்கள் சிக்கி உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் நிலை குறித்து அமைச்சர் நமச்சிவாயம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து முதல்வர் சபையில் தெரிவிப்பார்’ என்றார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய மூன்று பெண்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை. அவர் நிலை குறித்து தெரிந்து கொள்ள அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்’ என்றார்.