உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கவர்னரை சந்தித்து அங்காளன் எம்.எல்.ஏ., மனு

 கவர்னரை சந்தித்து அங்காளன் எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி: அங்காளன் எம்.எல்.ஏ.,கவர்னர் கைலாஷ்நாதனை அவரது அலுவலகத்தில், நேற்றுசந்தித்து மனு கொடுத்தார். எம்எல்.ஏ., மனுவில் கூறியிருப்பதாவது: திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் இடையிலான படுகை அணை கடந்த 2021-ம் ஆண்டு உடைந்தது. புதிய படுகை அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, புதுச்சேரி அரசின் ஆட்சேர்பு விதி 6-ல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி அவர்களுக்கு உண்டான அதிகாரத்தினை பயன்படுத்தி மாற்றங்கள் செய்து, வயது வரம்பில் ஒரு முறை சலுகை வழங்கலாம் என்று உறுதி செய்துள்ளது.எனவே, குருப் 'பி' வகை பணியிடங்களுக்கு ஒருமுறை 2 ஆண்டுகள் வயது தளர்வு வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி