மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பாலம் கட்டும் பணி
09-Dec-2025
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில், அங்கன்வாடி மையம் மற்றும் சாலை அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், அரியாங்குப்பம் பி.சி.பி., நகரில் 30.24 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, கென்னடி நகரில், 17.37 லட்சம் மதிப்பில், சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயகமூர்த்தி, உதவிப்பொறியாளார் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சரஸ்வதி, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Dec-2025