அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம், சுதேசி பஞ்சாலை அருகில் நடந்தது.சங்கத் தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளனம் நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், முனுசாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஏழவாது ஊதிய குழு பரிந்துரையை அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.