மேலும் செய்திகள்
முதல்வருக்கு முன்னாள் அங்கன்வாடி ஊழியர்கள் நன்றி
13-Sep-2025
புதுச்சேரி: அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் ராஜலட்சுமி கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், கடந்த 2021ம் ஆண்டு 175 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டிற்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். காலி பணியிடங்களில் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக 344 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 274 உதவியாளர் பணியிடங்களை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே துறை சார்பில் வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிப்பை திரும்ப பெற்று, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள காலி பணியிடங்களை மட்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தகுதி வாய்ந்த நிரந்தர உதவியாளர்களுக்கு ஊழியர் பதவி உயர்வும், ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது' என்றார். அப்போது, சங்க செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி, அமைப்பு செயலாளர் சத்தியா, அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ராதாகிருஷ்ணன் முனுசாமி உடனிருந்தனர்.
13-Sep-2025